தமிழ் சினிமாவில் ரஜினியின் இடத்தை கைப்பற்ற தற்போது அஜித்தும், விஜய்யும் சினிமா உலகில் வெற்றி படங்களை கொடுத்து மோதிக் கொண்டு வருகின்றனர். விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அதுபோல அஜித்தும் தற்போது வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங்கை பல வருடங்கள் கழித்து தற்போது வெற்றிகரமாக முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து மீண்டும் ஹச். வினோத்துடன் இணைந்து நடிக்க உள்ளார்.
வலிமை பட குழு திரைப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை வெளியிடாமல் மறைமுகமாக வைத்திருந்ததால் அந்த செய்திகள் தற்போது ரசிகர்களுக்கே பல மாதங்கள் கழித்து தாமதமாக தெரிய வந்துள்ளது. வலிமை படத்தில் நடித்த பிரபலங்கள் ஒவ்வொருவராக தேடி கண்டுபிடித்து அவர்களிடம் உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக் கொண்டு வருகின்றனர்.
அந்த பிரபலங்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாக மீடியா வெளிச்சத்திற்கு வந்து இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று சொல்லி படத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து உள்ளனர். இப்படி இருக்க தமிழ் சினிமாவில் தற்போது மிகச் சிறப்பாக வளர்ந்து நிற்கும் நடிகரான யோகி பாபு இந்த படத்தில் நடிக்கிறாரா இல்லையா.. என்பது தெரியாமல் இருந்து வந்தன.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் யோகி பாபுவிடம் அஜீத்தின் வலிமை படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என கேட்டதற்கு ஆம் நானும் நடிக்கிறேன் என சொல்லி உள்ளார். இச்செய்தி அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது.