கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜிகர்தண்டா இந்த திரைப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமிமேனன் போன்ற பலரும் நடித்திருப்பார்கள் இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூல் செய்ததாக கூறப்படுகிறது மேலும் இந்த திரைப்படத்தில் பாபி சிம்ஹா சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.
அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் கதாநாயகனின் கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் அருமையாக இருந்தது மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்திலும் ரஜினிக்கு முதலில் வில்லனாக பாபி சிம்ஹா நடித்து இருப்பார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இந்த திரைப்படமும் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டது.இதனைத்தொடர்ந்து ஜிகர்தண்டா திரைப்படத்தில் சிறுவயது பாபி சிம்ஹாவாக நடிகர் விஜய்சேதுபதி ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
ஆனால் பாபி சிம்ஹா நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து இருக்கலாம் ஆனால் அந்த கதாபாத்திரம் அவருக்கு நன்றாக இருந்தது என படம் வெளிவந்தபோது பல மக்களும் கூறிவந்தார்கள்.இந்நிலையில் சித்தார்த் வேடத்தில் முதலில் விஜய்சேதுபதி தான் நடிக்க இருந்தார் என ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
ஆம் சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி தான் முதலில் நடிக்க இருந்தாராம் ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி சரியாக அமைய மாட்டார் என தயாரிப்பாளர் சி.வி குமார் இயக்குனரிடம் எடுத்துப் பேசி அந்த கதாபாத்திரத்தில் சித்தார்த்தை நடிக்க வைத்துள்ளதாக இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.