தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் அனைவரும் ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களாக இருக்கும் ரஜினி அஜித் விஜய் போன்றவர்கள் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி அசத்துகின்றனர்.
இவருக்கு கீழ் இருக்கும் நடிகர்கள் கூட ஒவ்வொரு படம் ஹிட் அடிக்கும் பொழுதும் சுமார் 5 கோடி கிட்டத்தட்ட சம்பளத்தை உயர்த்துகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி நடிகர்கள் சம்பள உயர்வு குறித்து பேசி வருகிறார். இதற்கு யார் காரணம் என்பதை குறித்தும் வியாபாரியாக கூறியுள்ளார் அது குறித்து தற்போது பார்ப்போம்.
அனைவருக்கும் போட்டி இருக்கிறது. ஒவ்வொரு நடிகரும் ஒரு படத்தை கொடுக்கும் பொழுது தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்துகின்றனர் அந்த வகையில் ரஜினி, அஜித், விஜய் ஆகியோர்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ் போன்றவர்களும் உயர்த்துகின்றனர்
நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இதனால் அவரது ஒவ்வொரு படம் வெற்றி அடையும் பொழுது 5 கோடி கிட்டத்தட்ட சம்பளத்தை உயர்த்துவதாக கூறப்படுகிறது தற்போது சிவகார்த்திகேயன் ஒரு படத்திற்கு 20 அல்லது 20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த நடிகரான தனுஷ் தான் வளர்த்து விட்ட பையன் சிவகார்த்திகேயன் அவனே ஒவ்வொரு படம் வெற்றி அடையும் பொழுது தனது சம்பளத்தை உயர்த்துகிறான் அப்ப நான் என்ன சும்மாவா என்பது போல தனுஷும் தற்பொழுது ஒரு படத்திற்கு 25 முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இப்படி ஒவ்வொரு நடிகர்களும் போட்டி போட்டு கொண்டு சம்பளத்தை உயர்த்துகின்றனர் இதனால் பெரும் அளவு பாதிக்கப்பட போவது தயாரிப்பாளர்கள் மட்டுமே என பிஸ்மி கூறினார்.