தற்போது உள்ள முன்னணி நடிகர்களுக்கு இணையாக திகழ்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த திரைப்படம் குறித்து அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் பல மொழி சூப்பர் ஸ்டார்களை கலம் இறக்கி அழகு பார்த்து வருகிறாராம் நடிகர் ரஜினி இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.
மேலும் தன்னுடைய மகள் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் நடிகர் ரஜினி அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக 24 கோடி வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினி படத்தில் பல நடிகைகள் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் அப்படி ஒரு நடிகை தான் அவருடைய படத்தில் நடிக்க ஆசைப்பட்டார் அதுமட்டுமல்லாமல் அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் கூட அவருடைய வாய்ப்பை பிரபல நடிகை ஒருவர் நிராகரித்து இருக்கிறார் இதனால் அவருடைய கேரியரே அதன் பிறகு வளரவே இல்லை என்று தற்போது புலம்பி வருகிறார்.
நடிகர்களுக்கு இணையாக கருதப்படுபவர் நடிகை நயன்தாரா இவரை பலரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா மற்றும் ரஜினி நடிப்பில் வெளியான குசேலன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சிறிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகையை நடிக்க வைக்க அந்த படத்தின் இயக்குனர் திட்டமிட்டு இருந்தார்.
அது மட்டுமல்லாமல் அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்த அந்த நடிகையை இந்த படத்தில் ரஜினியுடன் நடிக்க விருப்பம் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார் உடனே யாராக இருந்தாலும் இதற்கு சம்மதித்து விடுவார்கள் அதே போல தான் அந்த உதவி நடிகையும். ரஜினி சார் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் உற்சாகத்தில் இருந்தார் ஆனால் அவர் நடிக்கும் காட்சியை நயன்தாரா அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். இதனால் அந்த நடிகை சினிமாவில் வளர முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.