30,000 வாங்கிக் கொண்டிருந்த எனக்கு முதல்முறையாக லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தது இவர்தான்.! உண்மையை கூறிய ரஜினி

rajini
rajini

rajini : சினிமா உலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் இதுவரை 168 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதில் வெறும் 2% அல்லது 3% தோல்வி படங்களை தான் அவர் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி கடைசியாக நடித்த ஒரு சில படங்கள் சுமாரான வெற்றியை பதிவு செய்துள்ளன.

இதனால் தனது 169 வது திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்க இளம் இயக்குனர் நெல்சன் திலிப் குமாருடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது டஃபிங் பணிகளை நோக்கி நகர்ந்து உள்ளது.

இந்த படத்தில் ரஜினி வயதான தோற்றத்தில் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்..  ஜெயிலர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் “லால் சலாம்” திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ரஜினி திட்டமிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினி தற்பொழுது ஒரு படத்திற்கு சுமார் 100 கோடி சம்பளம் வாங்குகிறார்.  இந்த நிலையில் தனக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுத்து அழகு பார்த்த பிரபலம் யார் என்பது குறித்து ரஜினியே வெளிப்படையாக பேசி உள்ளார். எனக்கு முதன் முதலில் ஒரு லட்சம் சம்பளம் கொடுத்து அழகு பார்த்தவர்.

வேறு யாரும் அல்ல பஞ்சு அருணாச்சலம் தான். அதற்கு முன்பு நான் 30,000 தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன் என சூப்பர் ஸ்டார் கூறியுள்ளார்.  பஞ்சு அருணாச்சலம்  திரை உலகில் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், கவிஞர் என பன்முகத்தன்மை கொண்டவராக ஓடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.