ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதி ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான முறையில் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முதல் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் 4 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது இருப்பினும் துவக்க வீரராக கெய்க்வாட் மற்றும் ஜடேஜா ஆகியோர்கள் பார்ட்னர்ஷிப் ஓரளவு ரன் வேட்டையை அதிகரித்தது கடைசியாக சென்னை அணி 20 ஓவர்கள் 158 ரன்கள் எடுத்து இலக்கை நிர்ணயித்தது.
இந்த ஸ்கோரை மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ரன்னை ஈசியாக அடித்து நொறுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் சொல்லிக்கொள்ளும்படி அதிரடி காட்ட முடியாமல் போனது மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் இந்த போட்டி குறித்து பேசியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு நிச்சயம் தோனியின் கேப்டன்சி தான் காரணம் என கூறினார். தோனி எப்பொழுதும் போட்டிக்கு முன்னர் எந்தவித திட்டத்தையும் யோசிக்க மாட்டார் காலத்தில் எவ்வாறு போட்டி நகர்கிறது அதற்கு ஏற்றப்படி வியூகங்களை அமைப்பார் போட்டியையும் மிக கூர்மையாக கவனிக்கும் திறன் அவரிடம் உள்ளது.
மேலும் போட்டியில் எதிரணி வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்து பவுலின் சுழற்சி முறை மற்றும் பில்டிங் செட் செய்வது என அனைத்தும் தோனி சிறப்பாக செய்கிறார். பாஸ்ட் பவுளிங்கள் அடித்து நொறுக்கும் இஷன் கிஷன்னுக்கு ஏற்றமாதிரி சரியான முறையில் பவுலர்களை மாற்றியமைத்து விக்கெட்டை எடுத்தார் மேலும் பில்டிங்ஸ் மிக அருமையாக இருந்தது என கூறினார் சேவாக்.