நடிகர் சிம்பு தமிழ் சினிமா உலகில் தன்னை ஒரு நடிகராக மட்டும் வளர்த்துக் கொள்ளாமல் இயக்குனராகவும் பாடகராகவும் நடன இயக்குனராகவும் இசையமைப்பாளராகவும் வெளிப்படுத்தி தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதால் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக தற்பொழுது விஸ்வரூபம் எடுத்துள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் அதிரிபுதிரி ஹிட் அடித்து வசூலில் 100 கோடிக்கு மேல் சாதனை படைத்தது அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் இது இப்படி இருக்க இவர் நடித்த மன்மதன் திரைப்படம்.
குறித்து தற்போது சூப்பர் தகவல் ஒன்றை நடிகர் கூல் சுரேஷ் பேட்டி ஒன்றில் சொல்லியுள்ளார். மன்மதன் திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து இருந்தார்.இந்தப்படம் அப்பொழுது வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மேலும் சிம்பு கேரியரில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாக மன்மதன் திரைப்படம் இருந்தது.
மேலும் இந்த திரைப்படத்தில் சிம்பு இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து பின்னி பெடல் எடுத்து இருப்பார் உண்மையில் சொல்லவேண்டுமென்றால் இரண்டாவது கதாபாத்திரமான மொட்டை கதாபாத்திரத்தில் சிம்புவுக்கு பதில் முதன் முதலாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கூல் சுரேஷ்க்கு தான் முதலில் வந்தது.
அந்த கதாபாத்திரம் வேறு மாதிரி இருந்தது பின் அந்த கதாபாத்திரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு பின் பார்க்கும் பொழுது விறுவிறுப்பாக சிறப்பாக இருந்த காரணத்தினால் சிம்புவும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய சூழல் போனதால் அந்த மொட்டைசிம்பு கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறினார் நடிகர் கூல் சுரேஷ்.