“ஈட்டி” திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவர்தானாம்.! அதர்வா கிடையாது.?

eeti

முரளியின் மகன் அதர்வா தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார் இவர் நடிப்பில் வெளியான பானா காத்தாடி, முப்பொழுதும் உன் கற்பனை, சண்டிவீரன், பரதேசி, இரும்பு குதிரை, 100 போன்ற பல்வேறு படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார்.

தற்போது கூட நடிகர் அதர்வா நான்கைந்து படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் அந்த வகையில் குருதி ஆட்டம், நிறங்கள் மூன்று ஒத்தைக்கு ஒத்த ட்ரிகர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் அதர்வா சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது ஈட்டி.

இந்த படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் காதல் படமாக உருவாக்கப்பட்டிருந்தது. படம் அனைத்து தரப்பட்ட மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று அசத்தியது இந்த படத்தை ரவி அரசு இயக்கியிருந்தார். இந்தப்படத்தில் அதர்வாவுடன் கைகோர்த்து ஸ்ரீதிவ்யா.

மற்றும்  ஆடுகளம் நரேன், ஆடுகளம் முருகதாஸ், ஜெயபிரகாஷ், சோனியா திருமுருகன், காலி, வெங்கட் மற்றும் பலநட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி இருந்தனர். இந்த படம் வெளியாகி பல கோடி லாபம் பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதன் முதலில் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது.

arul nithi
arul nithi

அதர்வா கிடையாதாம் இயக்குனர் முதலில் இந்த படத்தின் கதையை வளர்ந்து வரும் ஹீரோ அருள்நிதியிடம் தான் கதையை கூறி உள்ளார் ஆனால் அப்போது அருள்நிதி மௌனகுரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்