“சூரியவம்சம்” படத்தில் ஹீரோவாக முதலில் நடிக்க வேண்டியது இவர்தான் – கடைசி நேரத்தில் நுழைந்த சரத்குமார்.! இயக்குனர் விக்ரமன் பேட்டி.

suryavamsam-
suryavamsam-

90 காலகட்டங்களில் பல சிறப்பான கமர்சியல் படங்களை கொடுத்து அசத்தியவர் இயக்குனர் விக்ரமன் அந்த வகையில் நடிகர் சரத்குமாரை வைத்து சூரிய வம்சம் என்னும் கமர்சியல் படத்தை கொடுத்து மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றார் மேலும் இந்த படம் அப்பொழுது வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது

சூரியவம்சம் திரைப்படத்தில் சரத்குமார், ராதிகா, தேவயானி, பிரியா ராமன், சுந்தர்ராஜன், மணிவண்ணன் மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசத்தி இருந்தனர். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 வருடங்களை தண்டுவிட்டாலும் இன்னும் இந்த படத்தை மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி தான் வருகின்றனர் அந்த அளவிற்கு இந்த படம் மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் சூரியவம்சம் படத்தை இயக்கிய இயக்குனர் விக்ரமன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில சுவாரசிய தகவல்களை கொடுத்துள்ளார். அவர் சொன்னது சூரியவம்சம் திரைப்படம் சரத்குமார் காண படமே கிடையாது என சொல்லி அதிர வைத்தார் மேலும் அவர் சொன்னது.

சூரியவம்சம் படத்தின் கதையை தயார் செய்து வைத்திருக்கும் நிலையில் தயாரிப்பாளர் சௌத்ரி விக்கிரமனை அழைத்து சரத்குமாருக்கு ஒரு படம் பண்ண வேண்டும் என கூற விக்ரமன் ஏற்கனவே தான் எழுதி வைத்திருந்த கதையை சௌத்ரியிடம் கூறினார். ஆனால் விக்ரமன் சொன்ன கதை சௌத்திரிக்கு உடன்பாடு இல்லை. வலுக்கட்டாயமாக விக்ரமன் சொன்னதால் சூர்யவம்சம் படம் சௌத்ரி தயாரிக்க ரெடியானார்.

ஆனால் சூரியவம்சம் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க நான் கார்த்தியை தான் தேர்வு செய்தேன் அவரை மனதில் வைத்து தான் கதையையும் எழுதினேன் ஆனால் கடைசி நேரத்தில் சரத்குமாருக்கு அது போனது. தயாரிப்பாளர் சௌத்திரி சரத்குமாருக்கு இந்த வாய்ப்பை கொடுக்க வேண்டும் என சொன்னார் அதன்படி சூர்யவம்சம் திரைப்படம் சரத்குமாருக்கு கிடைத்ததாக தெரிவித்தார்.

karthi
karthi