தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் நாவல்கள் உண்மை சம்பவங்கள் போன்றவற்றை தழுவி பல சிறந்த படங்களை கொடுத்து அவரது படங்களின் மூலம் பல நடிகர்களை உயர்த்தியுள்ளார். இந்த இயக்குனர் தற்போது பொன்னியின் செல்வன் என்னும் நாவலை தழுவி பொன்னியன் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார்.
இந்த படத்தை எடுக்க எம்ஜிஆர் காலத்தில் இருந்து பலரும் முயற்சித்தனர் ஆனால் ஒரு வழியாக மணிரத்தினம் தான் இந்த படத்தை இயக்க வேண்டும் என இருந்தது போல தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்தப் படத்திற்கான போஸ்டர் ட்ரைலர் பாடல்கள் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடிக்க தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி கமல் முதற்கொண்டு பல நடிகர்களும் ஆசைப்பட்டனர். அதனை அவர்களே கூட பல மேடைகளில் வெளிப்படையாக பேசி உள்ளனர்.
ஆனால் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு தான் கிடைத்துள்ளது அந்த வகையில் பொன்னியன் செல்வன் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், விக்ரம் பிரபு, ஜோபிதா, பிரபு போன்ற பல முக்கிய நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்தில் நடித்த பேட்டி ஒன்றில் பொன்னியன் செல்வன்..
படத்தில் விஜய் மற்றும் மகேஷ் பாபு இருவரும் நடிக்க உள்ளதாக இருந்தது என தெரிவித்துள்ளார். ஆம் விஜய் வந்திய தேவன் கதாபாத்திரத்திற்கும் மகேஷ்பாபு அருண்மொழி வர்மனாகவும் நடிக்க இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொன்னியன் செல்வன் படத்தில் விஜய் நடிக்க இருந்த வந்திய தேவன் கதாபாத்திரத்தில் தற்போது கார்த்தி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.