பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படங்களை மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து கொண்டிருக்கிறனர். அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் நாவலை 500 கோடி பொருள் செலவில் படமாக எடுத்துள்ளார் அதை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார்.
முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ஜெயராம் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படம் வெளிவர இன்னும் கொஞ்ச நாள்கள் தான் இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படம் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளிவருகின்றன பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினி, விஜய் என தொடங்கி பலரும் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்பட்டனர் ஆனால் மணிரத்தினம் வாய்ப்பு தரவில்லை என கூறப்பட்டது..
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி கதாபாத்திரத்தில் முதலில் அவரை நடிக்க ஒப்பந்தம் செய்யவில்லையாம் வேறு ஒரு நடிகரை தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்தனர் அந்த நடிகை வேறு யாரும் அல்ல… நடிகை ரேகா தான் முதலில் நடிக்க வைக்க முயற்சி செய்தனர்..
பிறகு சில காரணங்களால் உலக அழகி ஐஸ்வர்யா ராயை கமீட் செய்ததாக பேட்டி ஒன்றில் இயக்குனர் மணிரத்தினமே மனம் திறந்து வெளிப்படையாக பேசி உள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் ரேகாவை விட நந்தினி கதாபாத்திரம் முழுக்க முழுக்க ஐஸ்வர்யா ராய் சூப்பராக செட்டாகி உள்ளது நல்ல வேலை பார்த்து உள்ளீர்கள் என கூறி கமாண்ட் அடித்து வருகின்றனர்.