இளம் இயக்குனர்கள் அண்மை காலமாக நல்ல கதைகளை கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப் குமார், அட்லி போன்றவர்கள் வரிசையில் தற்போது பிரதீப் ரங்கநாதனும் இணைந்துள்ளார் இவர் இதுவரை இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்த இரண்டு திரைப்படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.முதலில் கோமாளி திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அவரே லவ் டுடே என்னும் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படம் வெற்றி பெற முக்கிய காரணம் இந்த காலகட்டத்திற்கு தேவையான சில அறிவுரைகளை சொல்லி உள்ளது தான் என கூறப்படுகிறது. லவ் டுடே திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கைகோர்த்து இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ஃபைனலி பாரத் போன்றவர்களும் கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்தது.
இந்த படத்திற்கு இன்னும் கூடுதல் பிளஸ் ஆக அமைந்தது. இந்த படம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருவதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன இதுவரை தமிழகத்தில் மட்டுமே 30 கோடி வசூலித்து இருக்கிறதாம். வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னது என்னவென்றால் கோமாளி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்ததே ஜெயம் ரவி கிடையாது. முதலில் இந்த படத்தின் கதையை இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா உடன் தான் சொன்னேன் ஆனால் அது நடக்காமல் போனதால் பின்பு இந்த வாய்ப்பு ஜெயம் ரவிக்கு சென்றுள்ளது.