ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யாமானசாவிற்கு கணவனாக முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம் – அவரே கூறிய சூப்பர் தகவல்.

raja rani
raja rani

வெள்ளித்திரையில் ஒரு படம் சூப்பர்ஹிட் எடுத்தால் அது அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் அதுபோல் தற்போது சின்னத்திரை சீரியல்களில்  அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வருகிறது அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடி மக்களின் மனதில் இடம் பிடித்தது தான் ராஜா ராணி.

இந்த சீரியலை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ராஜா ராணி முதல் பாகத்தில் நாயகியாக நடித்த ஆல்யாமானசா இரண்டாம் பாகத்திலும் முன்னணி ஹீரோயினாக நடிக்க வருகிறார்.

அவருக்கு ஜோடியாக இரண்டாம் பாகத்தில் சித்து என்பவர் நடித்து வருகிறார் இவர்கள் இருவரும் நடிக்கும் காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது இவர்கள் இருவருக்கும் உள்ள பொருத்தம் நன்றாக இருந்தது எனவும் கூறி வருகின்றனர் ஆனால் ஆல்யா மானசா வின் கணவர்  கதாபாத்திரத்தில் முதன்முதலில் இந்த சீரியலில் நடிக்க இருந்தவர் சபரி தானாம்.

ஆனால் ஏனோ சில காரணங்களால் அவர் இந்த சீரியலில் நடிக்க முடியவில்லையாம் இதுபோல பல சீரியல்களை சபரி தவறவிட்டு உள்ளாராம் தற்போது இவர் வேலைக்காரன் என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சபரி சின்னத்திரையும் தாண்டி வெள்ளித்திரையிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.