பொதுவாக நயன்தாரா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக அதிக ஆர்வமுடையவர் அது சமூகத்திற்கு கூறும் நல்ல கருத்தாக அமையும் திரைப்படங்களாக இருந்தாலும் சரி காதல் திரைப்படங்களாக இருந்தாலும் இவரின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாக இருந்தால் மட்டுமே நடித்து வருகிறார்.
இவ்வாறு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக கலக்கி வரும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் இமைக்கா நொடிகள்.
இத்திரைப்படத்தில் நயன்தாரா,விஜய் சேதுபதி,ராசி கண்ணா, அதர்வா உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தார்கள். இவ்வாறு இத்திரைப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று அமோக வெற்றியைப் பெற்ற இத்திரைப்படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார்.
இவ்வாறு இத்திரைப்படத்தில் நடித்திருந்த ஹீரோ-ஹீரோயின் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தார்களோ அந்த அளவிற்கு தனது சிறந்த வில்ல தனத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் அனுராக்கி.
இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஆனால் இவர் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் பிரபுதேவா மற்றும் கௌதம் மேனன் இவர்கள் தான் நடிக்க தேர்வாகி உள்ளார்கள். ஆனால் இவர்களால் நடிக்க முடியாமல் போனதால் அதன் பிறகு அனுராக்கி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில் ரசிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் கௌதம் மேனன் இருவரும் நடித்திருந்தார் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் என்று கூறி வருகிறார்கள்.