சேரன் நடித்த “ஆட்டோகிராப்” படத்தில் முதன்முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவரா.. ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்.!

seran
seran

இயக்குனராக அறிமுகமாகி பின் நடிகராக விஸ்வரூபம் எடுத்தவர் சேரன் ஒரு கட்டத்தில் எழுத்தாளராகவும் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கும் சேரன் இதுவரை பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

அந்த வகையில் பொற்காலம், வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, யுத்தம் செய், ராஜாவுக்கு செக் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தும், இயக்கியும் வெற்றி கண்டுள்ளார்.

தற்போது கூட பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி ஓடிக்கொண்டிருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் 2004 ஆம் ஆண்டு  சேரன் இயக்கத்தில் நடிப்பில் உருவான திரைப்படம் ஆட்டோகிராப். இந்த படம் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் காதல் நிறைந்த திரைப்படமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது.

இந்த படம் சேரனுக்கு மிகப்பெரிய ஒரு வெற்றி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் சிறந்த பொழுதுபோக்கிற்கான படமாக இது பார்க்கப்பட்டது மேலும் இந்த படம் தேசிய விருது மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருது என பல விருதுகளை தட்டி சென்றது.

ஆனால் முதன் முதலில் இந்த படத்திற்கு ஹீரோவாக சேரன் வேறொரு ஹீரோவை தான் நடிக்க வைக்க முயற்சி செய்து உள்ளார் அந்த ஹீரோ யாரும் இல்ல தளபதி விஜய் தான் ஆனால் அப்போது அவர் அந்த படத்தை நிராகரித்து விட பின் ஹிரோவை தேடாமல்  நடிகர் சேரன் முன்வந்து நடிக்கவும் செய்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சேரனுக்கும் ஹீரோவாக நடிக்க அதிக வாய்ப்புகள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.