பாஷா படத்தில் ரஜினிக்கு நண்பராக முதலில் நடிக்க இருந்த சூப்பர் ஸ்டார் இவர் தான்.? பல வருடம் கழித்து சொன்ன ஹீரோ.

rajini
rajini

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் ரஜினி பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை தன்வசப்படுத்தி நடித்து வருகிறார் தற்போதும் கூட காலத்திற்கு ஏற்றவாறு இளம் இயக்குநர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் அதனால் அவர் தொடர்ந்து வெற்றியை கொடுப்பதோடு அந்த படங்கள் ஒவ்வொன்றும் வசூலை வாரிக் குவிக்கின்றன.

இதனால் ரஜினியின் படத்தில் நடிக்க தற்பொழுதும் நடிகர்கள் பலரும் லைனில் காத்து கிடக்கின்றனர். ரஜினியுடன் இணைந்து படத்தில் நடித்த இளம் நடிகர் நடிகைகள் மற்றும் முன்னணி பிரபலங்கள் பலரும் அதன் பிறகு பட வாய்ப்பை குவிப்பார்கள் அதுபோல 1995ஆம் ஆண்டிலேயே ரஜினியுடன் நடித்து அதன்பிறகு பல்வேறு பட வாய்ப்பை பெற்றார் சரண்ராஜ்.

ரஜினியுடன் சரண்ராஜ் நடித்த திரைப்படம் வேறு எதுவும் அல்ல பாஷா தான். அந்த படத்தில் ரஜினியின் நண்பனாக நடித்து அசத்தியிருப்பார். சமீபத்தில் சரண்ராஜ் இந்த படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்தார்.

உண்மையிலேயே பாட்ஷா படத்தில் அன்வர் கதாபாத்திரத்தில் மம்முட்டி அவர்கள் தான் நடிக்க வேண்டியதாக இருந்தது ஆனால் அவர் ஏற்கனவே தளபதி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தால் இந்த படத்தில் மம்முட்டிக்கு பதிலாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

உண்மையில் பாட்ஷா படத்தில் ரஜினி மம்முட்டியும் இணைந்து நடித்திருந்தால் அந்த படம் இன்னும் ஹிட்டாகி இருந்திருக்கும் என தெரிவித்தார் ரசிகர்களும் ஆமாம் நீங்கள் சொல்வது போல அந்த படம் மேலும் ஹிட் ஆகியிருக்கும் என கூறி வருகின்றனர்.

நடிகர் சரவணன் தெலுங்கு சினிமாவிலும் கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவ்வாறு இயக்குனராகவும் இசையமைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் சினிமா உலகில் வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்ஷா படம் குறித்து சரண் ராஜ் கூறிய அந்த வீடியோ.