“விண்ணை தாண்டி வருவாயா” படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த ஹீரோ இவர் தானாம் – அவரே வருத்தத்துடன் சொன்ன தகவல் .

simbu
simbu

நடிகர் சிம்பு கௌதம் மேனன் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக இருந்து வந்துள்ளன இதுவரை சிம்புவும், கௌதம் மேனனும் மூன்று முறை இணைந்துள்ளனர் முதல் முறையாக விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் இருவரும் அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணை தாண்டி வருவாயா படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து திரிஷா, vtv கணேஷ், கிட்டி மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து இருந்தனர். படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் சென்டிமென்ட் கலந்த திகில் படமாக இருந்ததால் அப்பொழுது நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

நடிகர் சிம்பு கேரியரில் முக்கியமான படமாக விண்ணைத்தாண்டி வருவாயா படம் இருக்கிறது ரசிகர்களும் ரொம்பப் பிடித்துப் போன படம் விண்ணைத்தாண்டி வருவாயா என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் முதலில் விண்ணை தாண்டி வருவாயா படம் சிம்பு காணப்படவே இல்லை..

கௌதம் மேனன் முதலில் இந்தப் படத்தின் கதைக்காக நடிகர் ஜெய்யை தான் தேர்வு செய்துள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் சிம்பு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டதால் படம் உருவானதாக கூறப்படுகிறது இது குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகர் ஜெய் பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது விண்ணை தாண்டி வருவாயா

படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த பிரபலம் வேறு யாருமல்ல நான் தான் என வெளிப்படையாகக் கூறினார். சில காரணங்களால் அப்பொழுது அந்த படத்தை தவற விட்டுவிட்டேன் என வருத்தத்துடன் புலம்பி தள்ளினார்.