திரையுலகைப் பொறுத்தவரை ஒரு படம் நல்ல வசூலை பார்த்தால் மட்டுமே அது சிறந்த படம் என மக்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அது எல்லாம் இப்பொழுது தான் முன்பு எல்லாம் ஒரு படம் வந்தால் ரசிகர்கள் அந்த படத்தை பார்த்துவிட்டு ஒரு வாரங்கள் அல்லது இரண்டு வாரங்கள் பேசினாலே அந்த படம் ஒரு வெற்றி படமாகவே பார்க்கப்பட்டது.
அந்த வகையில் சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் வாரணம் ஆயிரம் இந்த திரைப்படம் முதலில் திரையரங்கில் வெளியானாலும் அதனை ரசிகர்கள் பெரிய அளவில் அப்போது வரவேற்கவில்லை அதன்பின் இந்த திரைப்படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.
இந்த படம் கௌதம் மேனன், சூர்யா மற்றும் இந்த திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்த படத்தில் ஹீரோயினாக சமீரா ரெட்டி மற்றும் ரம்யா ஆகியோர்கள் பின்னி பெடல் எடுத்து இருந்தனர் . உண்மையில் வாரணமாயிரம் திரைப்படத்தில் முதன் முதலில் ரம்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இயக்குனர் கௌதம் மேனன் அணுகியது என்னமோ நடிகை ஜெனிலியா தானாம்.
ஆனால் அவர் ஏதோ சில காரணங்களால் அந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை. அதுபோல சமீரா ரெட்டி கதாபாத்திரத்தில் முதலில் நடிகக் இருந்ததும் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் தானாம் ஆனால் அவர் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் வாரணம் ஆயிரம் திரை படத்தில் நடிக்க முடியாமல் போனது.
மேலும் கால்ஷீட்டும் அவருக்கு சரியான நேரத்தில் கொடுக்க முடியாததால் அவரால் முடியவில்லை. ஆனால் இந்த படத்தின் கதை அவருக்கு ரொம்ப பிடித்திருந்ததாம்.