7G படத்தில் நான் நடிப்பதற்கு முன்னால் இவர் தான் நடித்து கொண்டு இருந்தார்.! அதன் பிறகுதான் நான் வந்தேன்.! மனம் திறந்த சோனியா அகர்வால்.

7G
7G

தமிழ் சினிமா உலகில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவர் செல்வராகவன். இவர் எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கக்கூடிய இயக்குனர்களில் ஒருவராக விளங்குகிறார். செல்வராகவன் இயக்கும் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவரக்கூடிய வகையில் ஆக இருக்கும் அந்த வகையில் பல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

அதிலும் குறிப்பாக இவர் இயக்கிய மிகப்பெரிய வெற்றியடைந்தன திரைப்படம் செவன் ஜி ரெயின்போ காலனி.இப்படத்தில் காஜல் அகர்வால், ரவிகிருஷ்ணா, சுமன் ஷெட்டி, விஜயன், மனோகரம்மா, சுதா போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தனர் இத்திரைப்படம் 2004ஆம் ஆண்டு வெளிவந்து திரையரங்கில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.

இத்திரைப்படம்  வெளிவந்து இதுவரை 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது இதையொட்டி சமீபத்தில் காஜல் அகர்வால் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.அதில் அவர் கூறியது காதல் கொண்டேன் படத்தின் போதே 7ஜி ரெயின்போ காலனி படம் குறித்து தனுஷ் மற்றும் செல்வராகவன் பேசியிருந்தனர் அப்பொழுது நான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என அப்போது அவர்களிடம் கூறியிருந்தேன். ஆனால் அந்த படம் உருவாகி கொண்டிருக்கும் பொழுது நான் சிம்புவிடம் கோவில் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.

swathi-

அப்பொழுது ரத்தினம் சார் என்கிட்ட இருந்து அழைப்பு வந்தது நீங்கதான் இந்த படத்தில் நடிக்கப் போறீங்க ன்னு சொன்னாங்க அப்படி வந்ததுதான் இந்த படத்தில் வாய்ப்பு. ஆனால் நான் வருவதற்கு முன்பாக இந்த படத்தில் சுப்பிரமணியபுரம் ஸ்வாதி நடித்துக்கொண்டிருந்தார் என தெரிவித்தார் ஆனால் அவரால் தொடர முடியாததால் அவருக்கு பதிலாக இந்த படத்தில் நான் நடிக்க சென்றேன் என்று கூறினார் சோனியா அகர்வால்.