நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் மற்றொரு சிறப்பான படத்தை கொடுக்க ஹச். வினோத் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்தார்.
இந்த படத்தின் சூட்டிங் மட்டுமே இரண்டு வருடங்கள் எடுக்கப்பட்டு ஒருவழியாக ஜனவரி மாதம் 13 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் தான் முக்கியம் எனக் கருதி படக்குழுவும், அஜித்தும் முடிவு எடுத்து.
படத்தின் ரிலீஸ் தேதியை வேறு ஒரு தேதியில் மாற்றினார் வலிமை திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்களும், மக்களும் செம்ம உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் வலிமை படம் வெளிவருவதற்கு முன்பாக பிசினஸ் வேட்டைகளும் ஒருபக்கம் ஜோராக நடைபெற்று வருகிறது. வலிமை திரைப்படம் முதலில் தெலுங்கு மற்றும் தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் தான் வெளியாக இருந்தது தற்போது மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் வலிமை படத்தின் வசூலும் மிகப்பெரிய அளவில் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் பிசினஸ் வேட்டையில் மட்டுமே வலிமை திரைப்படம் 400 கோடியை அள்ளி இணைய தள பக்கத்தில் வயதாகி வருவதால் ரசிகர்கள் ட்ரெண்டிங்கி கொண்டாடி வருகின்றனர்.