நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து ஹீரோ, வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். வில்லனாக தமிழில் இவர் கடைசியாக தளபதி விஜயுடன் கைகோர்த்து பவானி கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது.
அதன் பிறகு இவர் ஹீரோவாக நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறத் தவறியது. இந்த நிலையில் நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் உடன் கை கோர்த்தது காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படம் ஹிட்டடித்த அடித்தால் நல்லது அப்படி இல்லை என்றால் விஜய்சேதுபதிக்கு சற்று சிக்கலை ஏற்படுத்தி விடும் என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு தொடர் தோல்வியை தசந்தித்து உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் சேதுபதி முதல் முறையாக பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்னத்துடன் கைகோர்த்து நடித்த திரைப்படம் செக்கச்சிவந்த வானம்.
இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து அருண்விஜய், அரவிந்த்சாமி, ஜோதிகா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி இருப்பார்கள். இந்த படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் மையமாக வைத்து வந்ததால் படத்தில் விறுவிறுப்பு பஞ்சம் இல்லாமல் இருந்தது. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் அப்போது வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில் செக்கச்சிவந்த வானம் படத்தில் விஜய்சேதுபதி ஒரு போலீசாக நடித்து இருப்பார். இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதி அப்போ சுமார் 2 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.