சின்னத்திரையின் மூலம் தனது வாழ்க்கையை பயணத்தை ஆரம்பித்தவர் கவின். முதலில் கனா காணும் காலம் சீரியலில் நடித்து என்ட்ரி கொடுத்தார் அதன் பிறகு சரவணன் மீனாட்சி, போன்ற சீரியல்களில் நடித்து வந்தார் திடீரென வெள்ளி திரையில் “நட்புன்னா என்னன்னு தெரியுமா” படத்தில் நடித்து தன்னை அறிமுகப்படுத்தினார்.
இந்த படம் சுமாராக ஓடியது. அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரை பக்கமே வந்தார். விஜய் டிவி தொலைகாட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட கவின் தனது மொத்தத் திறமையும் வெளிக்காட்டி அசத்தினார். காதல், ரொமான்ஸ், சென்டிமென்டில் என அனைத்திலேயும் பின்னி பெடல் எடுத்தார்.
வெளியே வந்த அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார். மேலும் பட வாய்ப்புகளும் குவிந்தது. முதலில் லிப்ட் திரைப்படத்தில் நடித்து நல்ல பெயரை பெற்றார் அதனை தொடர்ந்து கவின் பல்வேறு படங்களில் நடித்தாலும் எந்த ஒரு படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது கவினுக்கு தலைவலியை கொடுத்தது.
இந்த நிலையில் தான் அம்பேத் குமார் இயக்கத்தில் கவின் நடித்த “டாடா” திரைப்படம் கடந்த பிப்ரவரி பத்தாம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படம் முழுக்க முழுக்க காமெடி, சென்டிமென்ட், ரொமான்ஸ், காதல் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன் காரணமாக இந்த படத்தின் வசூல் மூலை முடுக்கு எங்கும் அள்ளியது. “டாடா திரைப்படத்தின் மொத்த buget 4- 5 கோடி. தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் 14.5 கோடி வசூல் செய்துள்ளதாம். கவின் கேரியரில் டாடா படத்தின் வசூல் தான் அதிகம்.. இந்த படத்தின் வெற்றியால் நடிகர் கவினுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்து வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன.