சினிமாவில் ஒரு சில நடிகர் மற்றும் நடிகைகள் ஒரு சில காட்சிகளில் நடித்து பிரபலம் அடைவதும் உண்டு அதிலும் ஒரு சில நடிகர் நடிகைகள் எத்தனை காட்சிகள் நடித்தாலும் பெரிதாக பிரபலம் அடைவதில்லை அந்த வகையில் ஒரு சில காட்சிகளில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் லட்சுமி. இவர் நடிகர் சிம்பு நயன்தாரா ரீமாசென் சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய வல்லவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்தத் திரைப்படத்தில் பள்ளி பருவ பெண்களில் ஒருவராக நடித்திருப்பார் அப்பொழுது சந்தானம் வெறும் பேப்பரை சுருட்டி வீசுவார் அதை பார்த்த ஒரு பெண் ஏன் வெறும் பேப்பரை வீசுகிற ஏதாச்சும் எழுதி கொடு என ஒரு பெண் கேட்பார் அவர் தான் லட்சுமி. அந்த காமெடி ரசிகர்களிடையே நன்கு பிரபலம் அடைந்தது அது மட்டும் இல்லாமல் இன்று வரை அந்த காமெடியை பார்த்தால் சிரிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
இந்த நிலையில் காதல் சுகுமார் அந்த நடிகை உடன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார் அந்த புகைப்படத்தை பதிவிட்டு வாய்ப்பு கிடைக்க வாழ்த்துக்கள் எனவும் கூறியுள்ளார் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன ஆனாலும் தன்னுடைய கணவரால் கைவிடப்பட்டு தற்பொழுது ஓலா டாக்சி ஒட்டி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் அப்படி இருக்கும் நிலையில் அவர் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார்.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு 19 வயது இருக்கும்பொழுது ஒருவர் தன்னை திருமணம் செய்து கொண்டார் அவர் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது ஆனால் அதனை என்னிடமிருந்து மறைத்து விட்டார் பத்து வருடங்கள் கழித்து எனக்கு அவருக்கு இரண்டாவது திருமணம் என்பது தெரிய வந்தது. அதுவும் குழந்தை பிறந்த பிறகு தான் எனக்கே தெரிய வந்தது தற்பொழுது அவருக்கு வயது 50 ஆகிவிட்டது என்னையும் கைவிட்டு விட்டார்.
அப்படியே என் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது என மிகவும் உருக்கமாக பேசி அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தார்.