தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை அனுஷ்கா. முதலில் தெலுங்கு சினிமாவில் தான் கால் தடம்பதித்தார் அங்கே ஐந்து, ஆறு படங்கள் நடித்த பிறகு தமிழில் மாதவன் நடிப்பில் உருவான ரெண்டு திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்தது நல்ல கதைகளில் நடித்ததால் ஒரு கட்டத்தில் தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், ரஜினி போன்ற நடிகர்களுடன் நடித்த தனது மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார்.
தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்த இவர் சோலோவாகவும் நடிக்க ஆரம்பித்தார் இந்த நிலையில் தான் அருந்ததி படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். கொடி ராமகிருஷ்ணா இந்த படத்தை மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் எடுத்திருந்தார் படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு பிறகு அனுஷ்காவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.
ஆனால் அருந்ததி திரைப்படத்தில் முதன் முதலில் நடித்திருக்க வேண்டியது வேறு ஒரு பிரபலம் தான் அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல.. மலையாள நடிகை மம்தா மோகன் தாஸ் தான். இயக்குனர் இந்த கதையை சொன்ன பொழுது அவருக்கு ரொம்ப பிடித்திருந்தாலும் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக பின் அனுஷ்கா படத்தில் நடித்தாராம்.
படம் வெற்றி பெற்ற பிறகு தெலுங்கு இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலிடம் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதே மிகப்பெரிய ஒரு தப்பு என கூறினாராம்.. அருந்ததி படம் கைநழுவி போக காரணம் என்னுடைய மேனேஜர் இவ்வளவு பெரிய படத்தை இந்த தயாரிப்பாளரால் தயாரிக்கவே முடியாது என சொன்னதைக் கேட்டு மம்தா மோகன்தாஸ் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாராம்..