எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம்.? முதலிடத்தில் மாரிமுத்து

ethirneechal
ethirneechal

வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரை தொலைக்காட்சிகள் ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்களை கொடுத்த வருகிறது. குறிப்பாக இல்லத்தரசிகளை கவர்ந்து இழுக்க பல தொலைக்காட்சிகள் புதுப்புது தொடர்களை களம் இறக்கி வருகிறது அந்த வகையில் சீரியலுக்கு பெயர் போனது சன் டிவி தொலைக்காட்சி எப்பொழுதுமே..

நல்ல நல்ல சீரியல்களை கொடுத்து வரும் அந்த வகையில் தற்போது  ஒளிபரப்பாகி வரும் “எதிர்நீச்சல்” சீரியல் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் சீரியலாக இருக்கிறது மேலும் டிஆர்பிஎல் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது எதிர்நீச்சல் சீரியலை திருச்செல்வம் எழுதி தயாரிப்பதோடு இயக்கியும் வருகிறார்.

இவர் இதற்கு முன்பு கோலங்கள், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சீரியல்களை இயக்கி வெற்றிகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல எதிர்நீச்சலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த சீரியல் குடும்பத்தில் நடக்கும் மோதல்களை மையமாக உருவாகியுள்ளது இந்த சீரியலில் நடிகர் மாரிமுத்து, அஜித் பட நடிகை கனகா, மதுமிதா உள்ளிட்ட பலர் இந்த சீரியல்களில் நடித்து அசத்து வருகின்றனர்.

இந்த சீரியலில் தற்பொழுது நடப்பது என்னவென்றால்.. குணசேகரன் முதலில் சொத்துக்காக  எல்லோரையும் வீட்டை விட்டு அனுப்பிய நிலையில் வக்கீல் உங்க மருமகள் இல்லாம உங்க சொத்து எல்லாம் உங்களுக்கு வந்து சேராது எனக் கூற மீண்டும் தனது மருமகள்கள் அனைவரையும் வீட்டுக்கு அழைத்து உள்ளார்.

அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது அதன்படி.. மாரிமுத்து – 20000, மதுமிதா – 15000, கமலேஷ் – 15000, ஹரிப்பிரியா – 15000, சபரி – 12000, சக்தி – 12000, கனிகா – 12000, பிரியதர்ஷினி – 10000 வாங்குகின்றனர்.