Jailer Movie: மிகப்பெரிய பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தினை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது தற்போது தான் இறுதி கட்டத்தை எட்டிவுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது நாளை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தது ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் இருந்து வரும் நிலையில் தற்போது ஜெய்லர் படத்தால் தான் நான் இத்தனை வருடங்களாக சேர்த்து வைத்த அனைத்து சொத்துக்களையும் இழந்து விட்டதாக தயாரிப்பாளர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த தயாரிப்பாளர் ரஜினிகாந்த் அவர்கள் மனசு வைத்தால் மட்டுமே நான் இந்த பிரச்சனையில் இருந்து மீள முடியும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு தமிழில் ரஜினியின் நடிப்பில் ஜெயிலர் படம் எப்படி உருவாகியிருக்கிறதோ அதேபோல் மலையாளத்திலும் ஜெயிலர் என்ற டைட்டிலுடன் மற்றொரு படம் உருவாகி உள்ளது. மேலும் இரண்டு ஜெயிலர் படமும் ஒரே நாளில் ரிலீஸ்சாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால சிறிய பட்ஜெட்டில் உருவான மலையாள ஜெய்லர் படத்திற்கு ஆபத்தாக இருக்கிறது.
அதாவது, மலையாளத்தில் சக்கீர் மடத்தில் என்பவர் ஜெயிலர் படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார். வெறும் 5கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக தன்னுடைய வீடு மற்றும் மகளின் நகைகள், கார் போன்றவற்றை விற்று தான் படத்தை உருவாக்கி இருக்கிறாராம்.
ரஜினியின் ஜெயிலர் படம் பான் இந்திய படமாக உருவாகி இருப்பதனால் அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது. எனவே மலையாளத்தில் மட்டும் ஜெய்லர் படத்தின் டைட்டிலை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர் சக்கீர் மடத்தில் வேண்டுகோள் வைத்துள்ளார்.
அவர் தயாரித்துள்ள படம் மலையாளத்தில் மட்டும் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த கோரிக்கையை கூறியுள்ளார். மேலும் முக்கிய காரணம் என்னவென்றால் ரஜினியின் ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துள்ளார் எனவே கண்டிப்பாக ரஜினியின் ஜெயிலர்தான் வெற்றி பெறும் என்ற பயத்தில் இவ்வாறு மலையாள படக்குழு கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால், இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது இதனால் தயாரிப்பாளர் நானும் ரஜினியின் தீவிர ரசிகர் தான் அவர் இதனை புரிந்து கொண்டு கஷ்டத்தில் இருந்து என்னை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கிறேன் என கூறி இருக்கிறார்.