முன்னணி நடிகர்களில் ஒருவரான இவர் நடிக்க!! தல அஜித் தான் காரணமா!!

ajith
ajith

Thala Ajith is the reason for his cinefield: தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டிருப்பது தல அஜித் என்று அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இவர் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்தையும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த பிரபல போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை ஹீமா குரோஷி நடிக்கிறார்.

இந்த படத்தில் தல அஜித் போலீஸ் கெட்டப்பில் நடித்து வருகிறார். இந்த  படத்தின் சண்டைக்காட்சிகள் பெரிய அளவில் மக்களிடையே சென்றடையும் என்று போனிகபூர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.  அஜித் நடிப்பில் டூப் போடாமல் பைக் சேசிங் சண்டை காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது.அந்த வீடியோ சமுக வலைத்தலங்களில் வைரலானது.

தல அஜித் பற்றி திரைப்படத் துறையினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் நேர்மறை கருத்துக்களை கூறி வருவது வழக்கமாகும். அந்த
வகையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சூர்யா அவர்கள் பேட்டி ஒன்றில் தான் திரையுலகிற்கு வருவதற்கு காரணம் அஜித் தான் என்று கூறியுள்ளார்.

சூர்யா அவர்கள்  முதலில் நடித்த நேருக்கு நேர் படத்தில் இவர் நடித்த அந்த கேரக்டரில் அஜித் நடித்துக் கொண்டிருந்தாராம். பின்பு அஜித்  சில காரணங்களால் அந்த படத்திலிருந்து விலகி விட்டாராம். அதன்பின் தான் நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினேன் என்று கூறியுள்ளார். அதனால் சூர்யா அவர்கள் திரையுலகில் இருக்க அஜித் தான் காரணம் என்று கூட கூறலாம் என அவர் கூறியுள்ளார். தற்பொழுது இந்த தகவல் சமுக வலைத்தளத்தில் வைரலகி வருகிறது.