தமிழ் சினிமாவில் தற்போது உள்ள பல நடிகர்கள் காசுக்காக திரைப்படங்களில் ஏனோதானோ என நடித்துவிட்டு அவர்கள் வேலையை பார்த்து வருகிறார்கள் ஆனால் அந்த காலத்தில் மக்களுக்கு நல்ல கருத்தையும் சமூக அக்கறை கொண்ட பல தகவல்களை திரைப்படங்களில் கூறி வந்தார்கள்.
அந்த காலத்து நடிகர்கள் என்றால் உடனே மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது எம்ஜிஆர்,சிவாஜி போன்ற நடிகர்கள் தான் ஆனால் அதையும் தாண்டி இவர்களுடன் போட்டி போடும் அளவிற்கு பல நடிகர்கள் இருந்துள்ளார்கள் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று அந்த வகையில் பார்த்தால் எம்ஜிஆர்,சிவாஜிக்குப் முன்பே ஒரு நடிகர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளாராம்.
இந்த தகவலை பற்றி தான் தற்பொழுது நாம் பார்க்க உள்ளோம் பி யு சின்னப்பா என்பவர் தான் தமிழ் சினிமாவில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் இவரது திரைப்படங்களைப் பார்ப்பதற்கு அப்பொழுது ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்துள்ளது.
ஆம் இவரது திரைப்படம் என்றால் மக்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் இவரது படத்தை பார்ப்பதற்கு திரையரங்குகளுக்கு கூட்டம் கூட்டமாய் வருவார்களாம் அந்த அளவிற்கு இவர் திரைப்படங்களில் தனது நடிப்பை முழுமையாக மக்களுக்கு வெளிப்படுத்தி கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருந்தார்.
இவரை வைத்து டி ஆர் சுந்தரம் என்பவர் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் இவரை முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிக்க வைத்துள்ளாராம் அப்பொழுது தமிழ் சினிமாவில் இரட்டை வேடத்தில் நடித்ததை எடிட் செய்யும் கருவி எதுவும் இல்லாததால் ஜெர்மனியில் இருந்து ஒரு ஒளிப்பதிவாளரை வரவைத்து இந்த திரைப்படத்தை இயக்கினார்கலாம்.மேலும் இந்த தகவலை அறிந்த மக்கள்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இவர்தான் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்தவரா என வாயை பிளந்து இந்த தகவலை பார்த்து வருகிறார்கள்.