தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் சூப்பர் ஸ்டார் என்கின்ற பட்டத்திற்கு போட்டி போடுகின்றனர் அந்த வகையில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று பேசி வருகின்றனர் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் தான் இப்படி சொல்லுகிறார்கள் என்று பார்த்தால் திரையுலகிலும் இப்படித்தான்..
விஜய்க்கு ஆதரவாக ஒரு சிலர் பேசினாலும் பெரும்பாலான திரை உலகில் இருப்பவர்கள் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது ரஜினிகாந்த் தான் என விஜய் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பேசி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டியில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
சூப்பர் ஸ்டார் பட்டம் பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது சமீபத்தில் கூட அஜித், விஜய் ரசிகர்கள் டுவிட்டர் பக்கத்தில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது குறித்து சண்டை போட்டு வருகின்றனர் ஆனால் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான் இதில் மாற்று கருத்து கிடையாது தற்போதைய சினிமாவில் சிவாஜி, கமல் நடிப்பு மற்றும் ரஜினிகாந்த் சாயில் இல்லாமல் ஒரு நடிகரும் இல்லை..
இப்பொழுது விஜய் ரஜினியை பின் தொடருகிறார் ரஜினி உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜப்பான் போனா கூட அவரை தெரியும் ஆனால் விஜய் ஜப்பானில் தெரியுமா.? விஜய் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தெரிந்தவர் ஆனால் ரஜினிகாந்த் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு தெரிந்தவர் இதுதான் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம்..
1995 ஆம் ஆண்டு விஷ்வா என்ற படத்தின் பூஜைக்கு வந்த ரஜினியை விஜய் எப்படி வரவேற்றார் என்பது தெரியும் ரஜினி காரில் இருந்து இறங்கும் பொழுது விஜய் அவசர அவசரமாக சென்று அவரை வணங்கி வரவேற்றார் அப்பொழுது அவர் முன் விஜய் கைகட்டி கொண்டு நின்றார் விஜய் எப்பொழுதும் தனிமையில் தான் இருப்பார் ஆனால் ரஜினி ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரிடமும் சகஜமாக பழகக் கூடியவர். விஜயின் முதல் படம் நாளைய தீர்ப்பு அவருக்கு தோல்வியை அதனால் இரண்டாவது படமாக செந்தூரப்பாண்டி படத்திற்கு ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் விஜய் அப்பா எஸ் ஏ சந்திரசேகருக்காக விஜயகாந்த் நடித்துக் கொடுத்தார்.
இது குறித்து விஜய் என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார் இன்றைக்கு இவ்வளவு வளர்ந்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் கேப்டன் தான் அதனால் கேப்டன் இல்லை என்றால் இன்று விஜய் இல்லை செந்தூர பாண்டி நடித்த சமயத்தில் விஜயகாந்த் மிகப் பெரிய நடிகர் ஆனாலும் விஜய் படத்தில் நடித்தார். ஆனால் இன்று விஜயகாந்த் மகனுக்கு விஜய் இப்படி செய்வாரா? அந்த மனசு அவருக்கு இருக்கா என கேள்வி எழுப்பி உள்ளார்.