தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தன்னை மிகப்பெரிய அளவில் வளர்த்துக் கொண்டவர் தளபதி விஜய். இவருக்கு தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர் அதனால் இவரது திரைப்படம் ஒவ்வொன்றும் அசால்டாக 200 கோடியை அள்ளி விடுகின்றன.
இதனால் தளபதி விஜய்யின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இவர் கடைசியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் 65 வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி உலக அளவில் படம் ரிலீசானது.
முந்தைய படங்கள் போல் இந்த படம் இல்லாதல் கலவையான விமர்சனத்தை பெற்று சுமாரான வசூலை அள்ளியதாக தகவல்கள் வெளிவந்தன. இருபின்னும் விஜய்க்கு தமிழ் நாட்டை தாண்டி மற்ற இடங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் ரசிகர்கள் இருப்பதால் நாட்கள் போகப்போக ஓரளவு நல்ல வசூலை அள்ளி தற்போது 200 கோடியை தொட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி இருந்தாலும் விஜய் லெவெலுக்கு 200 கோடி என்பது சற்று கம்மி தான் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் எந்தெந்த இடத்தில் நன்றாக ஓடியது, ப்பிளாப்பானது என்பது குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதன்படி பார்க்கையில் மலேசியா – ஹிட், சிங்கப்பூர் – அவரேஜ், UAE – பிளாப், UK – ஹிட், கர்நாடகா, கேரளா – பிளாப், ஆஸ்திரேலியா – ஹிட், ஆந்திரா, தெலுங்கானா – பிளாப். இருப்பினும் விஜயின் பீஸ்ட் திரைப்படம் படத்தின் பட்ஜெட்டை விட லாபத்தை ஈட்டி உள்ளதாகவே கூறப்படுகிறது இதுவரை 210 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.