விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இதன் காரணமாக விஜய் டிவியும் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை வருடம் தோறும் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்பொழுது இன்று தலைவருக்கான தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்று வருகிறது.
அதில் சாந்தி மாஸ்டர், ஜனனி மற்றும் ஜிபி முத்து ஆகியோர்கள் தலைவராக போட்டியிட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள் ஒரு கடிகாரத்தில் ஒரு கையைப் பிடித்துக் கொண்டு விட்டு விடாமல் அதிக நேரம் யார் தாக்கு பிடிக்கிறார்களோ அவர்களே இந்த போட்டியின் வெற்றியாளர் என முடிவு செய்துள்ளார்கள். இந்த போட்டியில் முதலாவதாக சாந்தி வெளியேறி விடுகிறார் அதன் பிறகு ஒரு மணி நேரம் கடந்த நிலையில் ஜிபி முத்து மற்றும் ஜனனி கடிகாரத்தைப் பிடித்துக் கொண்டே நின்று கொண்டு இருக்கிறார்கள்.
இறுதியாக அசால்டாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் தலைவராக ஜிபி முத்து தேர்வாகிறார். சாதாரணமாகவே ஜிபி முத்து போட்டியாளர்களை வறுத்தெடுத்து வரும் நிலையில் கண்டிப்பாக தலைவராகி விட்டால் மிகவும் சுவாரசியமாக இருக்கும் இவ்வாறு இந்நிகழ்ச்சியின் முதல் தலைவராக ஜிபி முத்து வெற்றி பெற்றுள்ள நிலையில் அவரின் பின்னாடி சென்று அமுதவாணன் தலைவரே தலைவரே என்று கூறி வருகிறார்.
மேலும் டாஸ்க் வென்ற பின்பு பீர், பிரியாணி வாங்கி தருவதாக வாக்கு கொடுத்தீங்களே எங்க என ஜிபி முத்துவை விடாமல் துரத்தி வருகிறார் அமுதவாணன் எனவே இவர்களிடம் மாட்டிக்கொண்ட ஜிபி முத்து இந்த தலைவர் பதவியை எனக்கு வேண்டாம் என கூறுகிறார்.
மேலும் பொதுவாக பிக்பாஸ் வீட்டில் யாரும் தூங்க கூடாது அப்படி தூங்குபவர்களை அந்த வீட்டின் தலைவர் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் ஆனால் ஜிபி முத்துவே அடிக்கடி தூங்கி பிக்பாஸ்யிடம் மாட்டிக்கொள்கிறார் இவ்வாறு வெல்லந்தையாக பேசி வரும் ஜிபி முத்து எப்படி தன்னுடைய தலைவர் பதவியை பயன்படுத்த இருக்கிறார் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.