தளபதி 65 ல் விஜய்யை புரட்டி எடுக்கப்போகும் வில்லன் நடிகர் இவரா.? அப்போ படம் மிரட்டல் அதிரடி தான்…

vijay

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார். இதனை தொடர்ந்து அடுத்து யார் இயக்கத்தில் யார் தயாரிப்பில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

மாஸ்டர் திரைப்படம் 50 சதவீத இருக்கைகள் வசதிகளுடன் வெளியானாலும் வசூலில் சாதனை படைத்தது. அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் திரைப்படம் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மிரட்டலாக இருந்தது படத்தில் விஜய் சேதுபதிதான் ஹீரோ என்றே கூறலாம் அந்த அளவு அவரின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தது.

இந்த நிலையில் அடுத்ததாக தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இவர் ஏற்கனவே கோலமாவு கோகிலா என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர். மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டெ அல்லது ராஷ்மிகா மந்தனா நடிக்க  இருக்கிறார்கள். இந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுடன் அதிகரித்துள்ளது.

அப்படி இருக்கும் வகையில் விஜய்க்கு வில்லனாக நவாசுதீன் சித்திக் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.  இவர் இதற்கு முன்பு விஜய் சேதுபதி, ரஜினி நடிப்பில் வெளியாகிய பேட்டை திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

nawazuddin-petta
nawazuddin-petta

அதனால் தளபதி 65 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.