தமிழ் சினிமாவே கதி என கடந்த இயக்குனர் அட்லி திடீரென ஹிந்தி பக்கம் சென்று ஹிந்தியில் கிங்காங் என பெயர் பெற்ற நடிகரான ஷாருக்கானுடன் கைகோர்த்து ஜவான் என்ற புதிய திரைப்படத்தை எடுக்க ரெடியாக இருக்கின்றனர்.
ஹிந்தி நடிகரை வைத்து எடுப்பதால் மற்ற நடிகர்களையும் ஹிந்தியிலே தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அட்லி தென்னிந்திய திரை உலகில் சிறப்பான அந்தஸ்தை வைத்திருக்கும் நடிகர்கள் ஒவ்வொருவராக தூக்கி வருகிறார்.
அந்த வகையில் தனக்கு ஜோடியாக நயன்தாராவை தூக்கிய நிலையில் காமெடியனாக யோகிபாபு இன்னொரு நாயகியாக பிரியாமணியை தொட்டு தூக்கினார் இப்படி ஒவ்வொருவராக தூக்கி வந்த நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது புனேவில் எடுக்கப்பட்டு வருகிறது.
அங்கே மெட்ரோ டிரெயினில் படத்தின் காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு ஜவான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் கதைப்படி இரண்டு கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்கிறார்.
ஒரு கதாபாத்திரத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் மற்றொரு கதாபாத்திரத்திற்கு அவருக்கு ஜோடியாக பிரியா மணியும் நடிக்கின்றனர். படம் முழுக்க முழுக்க ராணுவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் என தெரியவருகிறது.
இதில் ஷாருக்கான் மிகப்பெரிய ஒரு அதிகாரியாகவும் மற்றும் பையாகவும் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த திரைப்படத்திற்கு யாரு வில்லனாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகுபலி படத்தில் மிரட்டிய ராணா டகுபதி இந்த திரைப்படத்திற்கு வில்லனாக தட்டி தூக்கி உள்ளார் இயக்குனர் அட்லி.
விரைவிலேயே இவரும் அந்த படத்தின் சூட்டிங்கில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.