விஜய் டிவி தொலைக்காட்சியில் மிக பாப்புலரான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான் இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 6 -வது சீசன் சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஒரு சிலர் எலிமினேஷன் ரவுண்டின் மூலம் வெளியேறினார். ஜி பி முத்து சில காரணங்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு விஜே மகேஸ்வரி வெளியேறினார். வெளியே வந்த அவர் தொடர்ந்து பிக்பாஸ் குறித்து பல தகவல்களை கொடுத்தார். அப்படி சமீபத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக யார் வருவார் என்பது குறித்து அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
விஜே மகேஸ்வரி கணித்த வரை அவர் சொல்வது யாரை என்றால் விக்ரமனை தான்.. ஏனென்றால் இவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததிலிருந்து இப்பொழுது வரையிலும் எப்படி ஒரு விஷயத்தை அணுக வேண்டும், எப்படி விளையாட வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொண்டு செயல்படுவதால் பிக் பாஸ் வீட்டிலேயேயும் சரி வெளியேவும் சரி அவருக்கு ஆதரவு அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
ஏன் உலக நாயகன் கமல் கூட விக்கிரமனை தொடர்ந்து புகழ்ந்து பேசி வருகிறார். எலிமினேஷன் ரவுண்டில் இவர் சிக்கினாலும் முதல் ஆளாக காப்பாற்றப்படுகிறார் இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுதே தெரிகிறது இந்த பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் விக்கிரமன் தான் இருப்பார் என தெரிய வருகிறது.
அவர் சொல்லுவது போல தான் தற்பொழுது நிலவரங்களும் காட்டுகின்றன இன்னும் சிறிது நாட்கள் தாக்கு பிடித்தால் போதும் அவர் டைட்டில் வின்னர் ஆகுவது உறுதியாக கூறிவிட முடியும். விக்ரமன் ரசிகர்கள் இந்த தகவலை இணையதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.