டிடி என்கின்ற பெயர் வந்ததுக்கு காரணமே இவர்தான் – பல வருட ரகசியத்தை சொன்ன திவ்யதர்ஷினி..!

divya-dharhsin
divya-dharhsin

வெள்ளித்திரையில் இருக்கும் நடிகர் நடிகைகள்  தான் காசு சம்பாதிக்க முடியும் என பலர் மனக்கோட்டை கட்டியிருக்கின்றனர் ஆனால் உண்மையில் வெள்ளி திரையையும் தாண்டி சின்ன திரையில் தொகுப்பாளராக பயணியாற்றி வருபவர்களும் இலட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஏகப்பட்ட தொகுப்பாளர்கள் இருந்தாலும்..

டிடி என்கின்ற திவ்யதர்ஷினி  மெயின் தொகுப்பாளராக  இருந்து வருகிறார். குறிப்பாக இவர் நநடிகர்களின் இசை வெளியீட்டு விழா, படத்தின் வெற்றி விழா போன்ற சிறப்பான நிகழ்ச்சிகளுக்கு டிடியை மட்டுமே பயன்படுத்தி வருகிறது இதற்காக டிடிக்காக பல லட்சம் சம்பளமும் கொடுத்து வருகிறதாம். இது இப்படி இருந்தாலும் டிடி  அவ்வபொழுது சினிமா உலகில் தலைகாட்டி வருகிறார்.

இப்பொழுது கூட சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள ஒரு புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சின்னத்திரை வெள்ளித்திரை இரண்டிலும் ஓடினாலும் ரசிகர்களும் தனக்கு முக்கியம் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட அவர் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைப்பார்..

அதேசமயும் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி அண்மையில் டிடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பிரபல youtube சேனல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ரசிகர்கள் பங்கேற்றனர் அப்பொழுது டிடி – யிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது .

‘அதில் ஒன்றாக உங்களுக்கு முதலில் யார் டிடி என்கின்ற பெயரை வைத்தார்கள் சொல்லுங்கள் என கேட்டுள்ளனர் அதற்கு திவ்யதர்ஷினி என்கிற பெயர் நீளமாய் இருக்கு அதனால் அதை சுருக்கி கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க என்னோட கோ அங்கராக பணியாற்றிய தீபக்குக்கு இது தெரியும். அவர் வேலையின் போது என்னை டிடி எனக் கூப்பிட தொடங்கியது பின்னர் எல்லோருக்கும் அதுவே பழகிடுச்சு என கூறினார்.