நடிகை சிம்ரனின் மார்க்கெட் போனதற்கான காரணம் இது தான் என பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியா நடித்து மிகவும் பிரபலமாக இருந்து வந்தவர் தான் நடிகை சிம்ரன். ஏன் தற்பொழுது வரையிலும் பலருடைய கனவு கனியாக இருந்து வருகிறார்.
பெரிதாக மேக்கப் இல்லாமல் தனது கட்டுக்கோப்பான உடல் அமைப்பினால் நடித்து பிரபலமானார் அந்த வகையில் ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய் என ஜோடி போடாத நடிகர்களே இல்லை அந்த அளவிற்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் உடன் இருந்து வந்தார். இவ்வாறு இப்படி இருந்த இவர் ஒரு காலகட்டத்தில் தனது மொத்த மார்க்கெட்டையும் இழந்தார்.
அதாவது சிம்ரனின் தங்கை மோனல் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மேலும் இவர் கலம் மாஸ்டரின் உறவினர் பிரசன்னா என்பவரை மோனல் காதலித்து வந்தார். ஆனால் இவர்களிடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக காதல் தோல்வி ஏற்பட இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் மோனல் தற்கொலை செய்து கொண்டார்.
இது கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் மோனல் நினைவு நாள் அன்று சிம்ரன் உருக்கமான பதிவு வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் மோனல் போலவே நடிகை சிம்ரனுக்கும் ஒரு காதல் தோல்வி இருந்திருப்பதாக விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
அதாவது நடனத்தில் பேர் போனவரான சிம்ரன் பிரபுதேவாவின் அண்ணனும் டான்ஸ் மாஸ்டர்மான ராஜு சுந்தரம் என்பவரை காதலித்துள்ளார். சிம்ரனின் நிறைய படங்களுக்கு கொரியோகிராபராக இருந்து வந்துள்ளார் இதனால் காதல் விஷயம் கோடம்பாக்கம் முழுவதும் பரவிய நிலையில் முன்னணி நடிகை சிம்ரன் டான்ஸ் மாஸ்டரை காதலிக்கிறாரா என்ற பேச்சு பரவ இதனால் இவர் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை இழந்தார்.
அதன் பிறகு தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தற்பொழுது சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் சிம்ரன் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் அம்மா, வில்லி போன்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் டான்ஸ் மாஸ்டருடன் அப்போது சிம்ரன் காதல் வலையின் சிக்காமல் இருந்திருந்தால் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் இருந்திருப்பார் என பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.