நடிகர் அஜித்குமார் மக்கள் மற்றும் ரசிகர்களை திருப்திப்படுத்த சிறப்பான கதை உள்ள படங்களில் நடிப்பது வழக்கம் அப்படி இவரின் மங்காத்தா பில்லா துணிவு போன்ற படங்கள் ரசிகர்களுக்கு இன்றளவும் ஃபேவரட் படங்களாக இருந்து வந்துள்ளன.
இந்த படங்களை தொடர்ந்து அடுத்து மகிழ் திருமேனியுடன் கூட்டணி அமைத்து விடாமுயற்சி என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி இருந்தாலும் ரசிகர்களுக்கு மங்காத்தா பார்ட் 2 படம் உருவாக வேண்டும் என்ற ஆசை பல வருடங்களாக இருந்து வருகின்றன. இதற்கு அஜித்தும் ஓகே சொல்லி இருந்தாராம்..
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் மங்காத்தா 2 திரைப்படத்தில் நடிக்க இருந்தார் ஆனால் வெங்கட் பிரபுவின் செயலால் அந்த படம் ட்ராப்பானதாக பல தகவல்கள் கசிந்த நிலையில் இது குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு வெளிப்படையாக கூறியுள்ளார்.. மங்காத்தா 2 ட்ராப்பாக காரணமே வெங்கட் பிரபு தான் அவர் எப்பொழுதுமே லூஸ் டாக் விடக் கூடியவர்.
தற்பொழுது கூட விஜய்யை வைத்து தளபதி 68 படத்தை எடுக்க இருக்கிறார். இது குறித்து பல தகவல்கள் கசிந்து கொண்டே இருப்பதால் விஜய் கூட வெங்கட் பிரபு மீது செம்ம கோபத்தில் இருக்கிறாராம்.. அஜித் தனது 62வது திரைப்படத்தில் நடிக்க முதலில் திட்டமிட்டார் அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது.
ஆனால் அவர் சொன்ன கதையின் இரண்டாவது பாகம் சிறப்பாக இல்லாததால் அவர் வெளியேறினார் அடுத்ததாக இயக்குனரை தேடி வந்த நிலையில் லைகா தயாரிப்பு நிறுவனம் மங்காத்தா 2 படத்தை எடுக்கலாம் என கூறியது ஆனால் அஜித் வேண்டாம் என மறுப்பு தெரிவித்து விட்டார் காரணம் வெங்கட் பிரபுவின் இந்த சுபாவம் தான் என கூறப்படுகிறது.