நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமே இவர்தான்..! வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்

vetrimaran
vetrimaran

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள ஆசை அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என நினைப்பார்கள் அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்துகிறார். முதலில் நடிகர் தனுஷ் உடன் கைகோர்த்து பொல்லாதவன் படத்தை எடுத்தார்.

அந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது அதன் பிறகு இந்த கூட்டணியில் ஆடுகளம், அசுரன், வடசென்னை என அடுத்தடுத்த படங்கள் வெளிவந்தன இதனால் வெற்றி மாறனின் மார்க்கெட் உச்சத்தை தொட்டார். அண்மையில் விஜய் சேதுபதி, சூரியை வைத்து விடுதலை என்னும் படத்தை எடுத்தார்.

படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்தார் அதன்படி முதல் பாகம் அண்மையில் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது இந்த நிலையில்  நிகழ்ச்சி ஒன்றில் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.

அவருடன் மணிரத்தினம், கந்தாரா பட இயக்குனரும், நடிகரான ரிஷப் ஷெட்டி இருந்தனர். அப்பொழுது  வெற்றி மாறன்.. நான் சினிமாவிற்கு வர யார் காரணம் என்பது குறித்து அவர் வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.. நான் சினிமாவுக்கு வர காரணமே மணிரத்தினம் தான் என கூறினார் மேலும் பேசிய வெற்றிமாறன் மணிரத்தினம் சார்..

என்னை மாஸ்டர் என அழைக்கும் போது நான் சங்கடமாக உணர்கிறேன் மணிரத்தினம் சார் அவர்கள் இளைஞர்களுக்கு ஊக்கம் அதிகமாக கொடுக்கக்கூடியவர் என கூறினார் மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களை வெற்றிமாறன் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில்  காட்டு தீ போல பரவி வருகிறது