இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தை புகழ் பெற்ற கல்கியின் நாவலில் இருந்து தழுவி எடுக்கப்பட்ட ஒரு கற்பனை காவியமாகும். மேலும் பொன்னியன் செல்வன் படம் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் ஒரு நல்ல இடத்தை பிடித்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அதிலும் குறிப்பாக வெந்தய தேவன் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த கதையில் உள்ள குந்தவையின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்த காத்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து பொன்னின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த ரசிகர்கள் சோழர்களின் வரலாற்றை சமூக வலைத்தளத்தில் வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுதான் குந்தவையின் உண்மையான புகைப்படம் என ஒரு புகைபடம் சமுக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதை ஒரு திரு சமூக வலைதள பிரபலம் வெங்கடேஷ் ஆறுமுகம் என்பவர் விரிவாக விளக்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதுதான் குந்தவையின் புகைப்படம் என நகைச்சுவையாக வெளியிட்டு இருந்த நிலையில் அந்த புகைப்படம் தான் உண்மையான குந்தவை என வைரலாகி வருகிறது இதற்கு அவர் ஒருவிளக்கம் அளித்துள்ளார்.
அதாவது மலேசியாவில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சோழ இளவரசி குந்தவையின் ஒரே அறியா புகைப்படம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
