தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்த அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் ஏராளமான இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் விஜயை வைத்து படங்களை உருவாக்குவதில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் நேற்று தளபதி விஜய் 67 திரைப்படத்தின் பூஜை நடைபெற்ற முடிந்துள்ளதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு படத்தின் டீசருக்கான படப்பிடிப்பு தான் முதலில் துவங்க இருப்பதாகவும் அதன் பிறகு தான் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது. தளபதி 67 திரைப்படத்தின் பூஜையில் விஜய், லோகேஷ் கனகராஜ் ஆகியோர்கள் நேற்று கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் இவர்களை தொடர்ந்து மேலும் சிலரும் கலந்து கொண்டார்களா அந்த வகையில் முக்கியமாக நடிகை திரிஷா கலந்து கொண்டதாகவும் பிறகு பிரியா, ஆனந்த், சாண்டி மாஸ்டர் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர்களும் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் விஷால் தான் முக்கியமான வில்லனாக நடிக்க இருக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அவருக்கு பதிலாக நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும் அவரது கேரக்டர் இந்த படத்தினை தெறிக்க விடும் அளவிற்கு இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது
மேலும் இவர்களை தொடர்ந்து விஜயின் மனைவியாக திரிஷா நடிக்க இருப்பதாகவும் பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படம் வருகின்ற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது பூஜை குறித்த புகைப்படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தற்பொழுது நடிகர் தளபதியின் ரசிகர்கள் வாரிசு திரைப்படத்திற்காக மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.