படத்தில் நடிக்கும் பல வில்லன் நடிகர்கள் நிஜத்தில் ஹீரோவாகவும் குணத்தில் பொறுமையாகவும் இருப்பார்கள். ஆனால் படத்தில் நடிக்கும் பொழுது கொடூர வில்லனாகவும் தன்னுடைய செய்கையால் ஐயே பார்ப்பவர்களை மிரள வைக்கக் கூடியவராக இருப்பார்கள்.
அந்த வகையில் தன்னுடைய புருவத்தை உயர்த்தி இரண்டு கைகளையும் பிசைந்து இவர் பார்க்கும் பார்வைக்கு பயப்படாத ஆட்களே கிடையாது எனக் கூறலாம். உங்களுக்கே தெரியும் அது வேறு யாரும் கிடையாது நம்ம நம்பியார் தான்.
இவர் சினிமாவில் கொடூர வில்லனாக காணப்பட்டாலும் நிஜத்தில் ஹீரோவாகவும் குணத்தில் பொறுமையாகவும் இருப்பவர். நம்பியார் கேரளா மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்தவர் தன்னுடைய அசால்ட்டான நடிப்பால் வில்லன் கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார்.
சினிமாவில் வீரப்பா, மனோகர், அசோகன் ஆகிய திறமையான வில்லன் நடிகர்கள் இருந்தாலும் தனது வில்லத்தனத்தை சினிமாவில் வெளிப்படுத்தி அவர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.
அந்த அளவு இவரின் வெள்ளம் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் முதன்முதலில் நாடகக்குழுவில் சமையல் வேலை செய்து வந்தார் அப்பொழுது இலவசமாக உணவு தூங்குவதற்கு இடம் மட்டுமே அவருக்கு கிடைத்தது. திரை வாழ்க்கையில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அதிக பக்தி கொண்டவர்.
65 ஆண்டுகள் தொடர்ந்து சபரிமலைக்கு மாலை போட்டு உள்ளார் அதனால் இவரை குருசாமி கெல்லாம் குருசாமி என அழைத்து வந்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா பாலிவுட் சினிமா என கலக்கிக் கொண்டிருந்த ரஜினி, அமிதாப் பச்சன், ராஜ்குமார், சிவாஜி கணேசன் ஆகிய நடிகர்கள் அனைவரையும் பல கோயில்களுக்கு கூட்டி சென்றுள்ளார்.
எம்ஜிஆர் அவர்களுடன் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அதுவும் வில்லனாக நம்பியார் நடித்த சர்வாதிகாரி, விவசாயி, உலகம் சுற்றும் வாலிபன், எங்கள் வீட்டுப்பிள்ளை ஆகிய திரைப்படங்கள் கொடூர வில்லனாக நடித்து இருப்பார் அதனால் இவரை மக்கள் வெறுத்தார்கள்.
அதன்பிறகு நிஜத்தில் இவர் ஹீரோ என்பது சிறிது காலத்திற்கு பிறகு தான் மக்களுக்கு தெரியவந்தது. அப்பொழுது உள்ள காலகட்டத்தில் சிவாஜிகணேசன் எம்ஜிஆர் ஆகியோர்களுக்கு கொடூர வில்லனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நம்பியார்.