தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த ஒரே ஒரு ஹீரோ இவர் தான் – ரசிகர்கள் முன்னாடி உண்மையை சொன்ன விஷால்.! அந்த ஹீரோ யார் தெரியுமா.?

vishal
vishal

திரை உலகில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரும் யாராவது ஒரு நடிகரை இன்ஸ்பிரேஷனாக கொண்டுதான் சினிமா உலகில் கால் தடம் பதித்து ஒரு கட்டத்தில் அவரை ஓவர் டேக் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக உள்ளவர் நடிகர் விஷால்.

இவர் ஆரம்பத்தில் காதல், ஆக்ஷன் சம்பந்தப்பட்ட படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தாலும் போகப்போக பெரிதும் ஆக்சன் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் பெரிய அளவில் இவரது படங்கள் வெற்றி பெறவில்லை என்று விஷால் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர்விஷாலும், ஆர்யாவும் இணைந்து எனிமி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து என்றனர். இந்த திரைப்படம் நேற்று தீபாவளியை முன்னிட்டு வெளியாகியது படம் முழுக்க முழுக்க ஆக்சன் கதைகளாக இருந்தாலும் ஓரளவிற்கு இந்த திரைப்படம் நல்லதொரு விமர்சனத்தை பெற்று வருவதால் விஷால் நல்ல படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி அன்று எனிமி மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் திரையரங்கில் மோதியுள்ளன விஷாலுக்கு குறைந்த திரைஅரங்குகள் கிடைத்திருந்தாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் சில தியேட்டர்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கபடுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் இப்படத்தின் முதல்நாள் முதல் ஷோவில் நடிகர் விஷால் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்து பேசினார் அப்போது நான் நடிகர் விஜயின் தீவிர ரசிகர் என்பதை வெளிப்படையாக ரசிகர்கள் முன்பு கூறினார் அவர் கூறிய வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. இதோ அவர் பேசிய வீடியோ.