13 படங்களை இயக்கி தோல்வியை சந்திக்காத ஒரே இயக்குனர் இவர்தான்.! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே…

Director
Director

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்களாக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லி, வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், ஆகிய மூவரும் இதுவரைக்கும் தோல்வியை சந்திக்காத இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்கள். இதில் இயக்குனர்கள் அட்லி ஐந்து படங்களை இயக்கியுள்ளார் இந்த ஐந்து படங்களுமே மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது.

அதேபோல இயக்குனர் வெற்றி மாறன் அவர்கள் ஏழு திரைப்படங்களை இயக்கியுள்ளார் இந்த ஏழு திரைப்படங்களுமே வெற்றி பெற்று இருக்கிறது அதேபோல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நான்கு படங்களை இயக்கியுள்ளார் இந்த நான்கு படங்களுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது இப்படி தமிழ் சினிமாவில் தோல்வியை கண்டிடாத இயக்குனர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் இவர்களுக்கு முன்னோடியாக இருப்பவர் தான் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கிட்டத்தட்ட 12 திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது இந்த 12 திரைப்படங்களில் ஒரு திரைப்படம் கூட தோல்வியை சந்தித்தது கிடையாது. ஆம் 1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0, உள்ளிட்ட 12 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார் இவர் இயக்கிய எந்த ஒரு திரைப்படமும் இன்று வரையிலும் தோல்வியை சந்திக்காமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வேண்டுமானால் லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், அட்லீ, இவர்கள் தமிழ் சினிமாவில் தோல்வியை கண்டிடாத இயக்குனர்களாக இருக்கலாம் ஆனால் இவர்களுக்கு முன்னோடி என்றால் அது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மட்டும் தான். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் முதல்வன், காதலன், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, வெயில், கல்லூரி, அரை எண் 305ல் கடவுள், ஈரம், உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி படங்களை இயக்குவதிலும் தயாரிப்பதிலும் பிசியாக இருந்து வரும் இயக்குனர் சங்கர் அவர்கள் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ராம் சரனை வைத்து ஆர்சி 15 வது திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தையும் ராம்சரண் நடித்து வரும் ஆர்சி 15வது திரைப்படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.

இந்த இரண்டு திரைப்படங்களுக்கான அப்டேட்டுகள் இன்னும் வெளிவரவில்லை மேலும் இந்த இரண்டு திரைப்படங்களில் இருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்தியன் 2 திரைப்படம் அடுத்த வருடம் அதாவது 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என தகவல் கிடைத்திருக்கிறது.