தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருவர் ஜெயம் ரவி. இவர் திரை உலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறார் ஆனால் இதுவரை 25 க்கும் மேற்பட்ட படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
அதன் இரண்டாவது பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து சைரன், இறைவன், அகிலன் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலாவதாக பூலோகம் படத்தை இயக்கி வெற்றி கண்ட கல்யாண கிருஷ்ணன் எடுத்த அகிலன் திரைப்படம் தான் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அண்மையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் போன்றவை வெளிவந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது படத்தில் ஜெயம் ரவி உடன் இணைந்து ப்ரியா பவானி சங்கர், தன்யா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் ஜெயம் ரவி அகிலன் திரைப்படம் குறித்து..
பல்வேறு பேட்டி கொடுத்து வருகிறார் அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் அகிலன் திரைப்படம் குறித்தும் தன்னுடைய சினிமா பயணம் குறித்தும் பேசியிருந்தார் அப்பொழுது அவரிடம் திரையுலகில் எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய் என போட்டிகள் இருந்து வருகிறது.
இது ஒரு ஆரோக்கியமான போட்டி தான் அப்படி உங்களுக்கு யார் போட்டி என கேட்டுள்ளனர் அதற்கு பதில் அளித்த நடிகர் ஜெயம் ரவி.. எனக்கு யாரும் போட்டி கிடையாது எனக்கு நான் தான் இப்படியே இருந்து விட்டு போய் விடுகிறேன் என பேசி அசத்தினார் அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.