தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் வில்லத்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களை மிரட்டியவர்தான் ஆனந்தராஜ் இவருடைய நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்ப்பை பெற்று பெரிய அளவு வெற்றி பெற்றுள்ளது.
அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படங்களில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடிப்பது மட்டுமல்லாமல் காமெடியிலும் வெளுத்து வாங்கி வருவார். அந்தவகையில் ஆனந்தராஜ் தன்னுடைய திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என ஏங்கிக் கிடந்த இயக்குனர்கள் ஒரு காலத்தில் ஏராளம்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரைத்துறையில் மிகப்பெரிய வில்லனாக ரசிகர்களின் பார்வையில் தென்பட்டாலும் உண்மையில் அவர் சிறந்த மனிதன் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் இவர் பேசும் பொழுது மிகவும் காமெடியாக பேசுவார் என பல பிரபலங்களும் மீடியாக்கள் முன் கூறி உள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் அதுவே படப்பிடிப்பு தொடங்கி விட்டால் போதும் இவருடைய முகம் நடை உடை பாவனை என அனைத்துமே மாறிவிடுமாம். மேலும் நடிகர் ஆனந்தராஜ் இதுவரை எந்த ஒரு நடிகையுடனும் கிசுகிசுக்க பாடவில்லை. அதேபோல எந்த ஒரு நடிகையுடனும் இவர் நெருங்கிப் பழகியதும் கிடையாதாம்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபகாலமாக வில்லனாக நடிக்காமல் காமெடியனாக நடித்து வருகிறார். அந்த வகையில் ரசிகர்கள் பலரும் தற்போது மீண்டும் ஆனந்தராஜ் வில்லனாக நடிக்க வேண்டும் என சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள்.