வெள்ளி திரைக்கு நிகராக சின்னத்திரை தொலைகாட்சியும் வித்தியாசமான சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறது குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சி மற்ற சேனல்களை விட சற்று வித்தியாசமான நிகழ்ச்சிகளை கொடுத்து வருகிறது அதில் ஒன்று பிக்பாஸ்..
இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் பிக்பாஸ் 6 – வது சீசனும் அண்மையில் தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். காமெடி நடிகர் ஜி. பி. முத்து மட்டும் கமலிடம் உண்மையான காரணத்தை சொல்லி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
மற்றவர்கள் அனைவரும் வார வாரம் நடத்தப்படும் எலிமினேஷன் ரவுண்டில் குறைந்த ஓட்டுக்களை வாங்கி ஒவ்வொருவராக வெளியேறினார் கடைசியாக சீரியல் நடிகை மைனா நந்தினி வெளியேறினார் இப்பொழுது பிக் பாஸ் வீட்டில் மொத்தம் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள் இந்த மூன்று போட்டியாளர் வேறு யாரும் அல்ல..
சிவின், அசீம் மற்றும் விக்ரம் தான் இறுதி கட்டத்திற்கு சென்று உள்ளனர் இதில் யார் டைட்டில் வின்னர் படத்தை பெற போகிறார் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் மற்றும் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அனைவருக்கும் தெரியும் அசீம் அல்லது விக்ரமன் யாரேனும் ஒருவர் தான்..
வெற்றி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தகவல் வெளியே வைரலாகி வருகிறது அதாவது டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற அதிக வாய்ப்பு விக்ரமன்னுக்கு தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.