IND VS NZ அணியுடனான போட்டியில் இவர் தான் கெத்து காட்டுவார்.! புதிய பயிற்சியாளரான ஷேன் ஜார் ஜென்சன் அதிரடி.

indian

ஐபிஎல் தொடர் முடிந்ததும் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படுவது இந்தியா நியூசிலாந்து அணியுடனான போட்டி தான். ஏனென்றால் இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டி என்பதால் யார் கோப்பையை கைபற்ற போகிறார்கள் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த போட்டி வருகின்ற ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள சாவுதாம்ப்டன் நகரில் நடைபெற இருக்கிறது. இதில் இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளதால் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கபடுகிறது ஏனென்றால் இந்திய அணி பந்து மட்டும் பேட்டிங்கில் பலத்துடன் இருக்கிறது.

அதுபோல நியூஸிலாந்திலும் சிறப்பான வீரர்கள் இருப்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் ஜார் ஜென்சன் சமிபத்தில் இந்த போட்டி குறித்து கூறுகையில்.

இந்திய அணி மிகப் பெரிய பேட்டிங்கில் வரிசை வைத்துள்ளது அதிலும் குறிப்பாக ரிஷப் பண்ட் மிகப் பெரிய ஆபத்தான பேட்ஸ்மேனாக கடந்த சமீப காலமாக இருந்து வருகிறார். அவர் சிறிது நேரம் நிலைத்து நின்று விட்டால் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமை அதிகம் இருக்கிறது அது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியின் போது பார்க்க முடிந்தது அதுவே நமக்கும் அமைந்துவிடக்கூடாது.

rishab pant
rishab pant

பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி அவரது விக்கெட்டையும் முதலிலேயே கைப்பற்றி விட வேண்டும் இல்லையென்றால் அது ஆபத்தில் முடியும் மேலும் இந்திய அணியில் பும்ரா, ஷர்துல் தாகூர், சிராஜ் போன்ற பந்து வீச்சாளர்களும் மிகப்பெரிய ஆக்ரோஷமாக இருப்பதால் விக்கெட்டுகள் மளமளவென சரிக்க கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது அதனால் நியூஸிலாந்து அணி எல்லாவற்றையும் சமாளித்து இந்த போட்டியை சிறப்பாக ஜெயிக்க வேண்டும் என கூறினார்.