தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் டானியல் பாலாஜி தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் ஆனந்தம் விளையாடும் வீடு. இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் பாலாஜி ஆடுகளம் என்னை அறிந்தால் படங்களில் முதலில் வில்லனாக நடிக்க வேண்டியதாக இருந்தது பற்றி பேசியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக இருந்து வரும் சன் டிவியில் சித்தி சீரியலில் டானியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் பாலாஜி அதன் பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவரை டேனியல் பாலாஜி என்று அழைத்துள்ளார்கள் அதன் பிறகு காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து காக்க காக்க உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார்
அந்த வகையில் குறிப்பாக நடிகர் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த மருகயநாணயம் திரைப்படத்தில் யூனிட் ப்ரொடக்ஷன் மேனேஜராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை ஈர்த்தது இவர் பெரும்பாலும் கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் பொல்லாதவன் திரைப்படத்திற்கு பிறகு ஆடுகளம் படத்தில் வில்லனாக இவரின் அடிக்க வைக்க தான் பேச்சுவார்த்தை நடந்து இருந்ததாம் ஆனால் வயதான கதாபாத்திரம் முகத்தில் சுருக்கம் வேண்டும் போன்ற சில காரணங்களில் ஆல் இவரால் நடிக்க முடியாமல் போய் உள்ளது இருந்தாலும் கிளைமாக்ஸில் பேட்டைக்காரன் கழுத்தை அறுத்துக் கொண்டு சாகும்பொழுது கழுத்தில் இருந்து ரத்தம் பீச்சு அடிக்க வேண்டிய ஸ்பெஷல் எக்யூப்மென்ட்ஸ் பேக்கை பாலாஜி தான் செய்து கொடுத்தாராம்
பிறகு என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் நடித்திருந்த விக்டர் கதாபாத்திரத்தில் முதலில் பாலாஜியிடம் தான் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அதில் பிறகு ஒரு சிறிய இடத்தில் நடித்திருப்பார் இவ்வாறு இரண்டு முக்கியமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை இழந்துள்ளார் பாலாஜி.