அண்மை காலமாக பிறமொழி படங்கள் தமிழ் நாட்டில் அதிகம் செலுத்துகின்றன அந்த வகையில் பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்களை தொடர்ந்து தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்து இழுத்த திரைப்படம் என்றால் அது கேஜிஎப் தான். இந்த படம் முழுக்க முழுக்க தங்க சுரங்கத்தை மையமாக வைத்து படத்தை உருவாகியது.
இந்த படத்தில் ஆக்சன், சென்டிமென்ட் போன்றவைகள் அதிக அளவில் இருந்தன படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்த காரணத்தினால் முதல் பாகம் வேற லெவலில் ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து உடனே இரண்டாவது பாகமுவும் உருவானது ஆனால் படம் ரிலீஸ் ஆக சற்று தாமதமானது இருப்பினும் படம் வெளிவந்து பட்டையை கிளம்பிது.
வசூலில் மட்டுமே ஆயிரம் கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரசிகர்கள் கே ஜி எஃப் 3 படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் ஆனால் இது குறித்து அண்மையில் யாஷ் சொன்ன தகவல் என்னவென்றால் வித்தியாசமான திரைப்படங்களில் தற்போது நடிக்க ஆசைப்படுகிறேன்.
கேஜிஎப்3 வர்றதுக்கு சற்று தாமதமாகும் என கூறியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருந்து வருகின்றனர் அதனை தொடர்ந்து நடிகர் யாஷ் சமீபத்திய பேட்டி கொடுத்தார் அப்பொழுது அவரிடம் பல கேள்வி கேட்கப்பட்டது. அதில் ஒன்றாக உங்களுடைய ஸ்டைல், இன்ஸ்பிரேஷன் யார் என்று கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அவர் எனக்கு ரோல் மாடல்கள் என்று சொன்னால் அதில் பலர் இருக்கிறார்கள்.
அதாவது அமிதாபச்சன், கமலஹாசன், ராஜ்குமார், அம்பரீஷ், சங்கர் நாக் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகும் இருப்பினும் நடிகர் ரஜினிகாந்த் என்னை அதிக அளவில் இம்ப்ரஸ் மற்றும் இன்புலியன்ஸ் செய்கிறார் என்று கூறினார் மேலும் தன்னுடைய ரோல் மாடல் நடிகர் ரஜினிகாந்த் என்று யாஷ் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.