Marimuthu : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் மாரிமுத்து. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற பெயரில் வில்லத்தனம் மற்றும் நகைச்சுவை கலந்த ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்தார். இவர் பேசும் ஒவ்வொரு டயலாக்கை பாக்கவே ரசிகர்கள் இருக்கின்றன.
தற்பொழுது இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு எதிர்நீச்சல் சீரியல் இவரது வாழ்க்கையை திருப்பி போட்டுள்ளது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக இன்று மாரடைப்பு காரணமாக மாரிமுத்து இயற்கை எழுதினார். இவரது மறைவு பலரையும் சோகத்தில் உள்ளாக்கியது.
இவரது இறப்பு செய்தி கேட்டு சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து சினிமாவில் முதலில் இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நுழைந்து இருக்கிறார். அந்த வகையில் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.
மேலும் ஆசை திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். வசந்த் இயக்கத்தில் அஜித், சுபலட்சுமி நடிப்பில் வெளிவந்த ஆசை திரைப்படத்தில் உதவி இயக்குனராக மாரிமுத்து பணியாற்றி இருக்கிறார். அந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவும் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆசை படத்திற்கு சம்பளமாக மாரிமுத்து 1500 வாங்கினாராம்.
இதைத்தொடர்ந்து எஸ்.ஜே சூர்யா இயக்கிய குஷி, வாலி போன்ற படங்களிலும் மாரிமுத்து உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அந்த நேரத்தில் மாரிமுத்துவிற்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ள நேரம் மருத்துவ செலவிற்கு கூட காசு இல்லாமல் தவித்த போது எஸ் ஜே சூர்யா தான் மாரிமுத்துவின் மனைவியுடைய பிரசவத்திற்கு மொத்த செலவையும் பார்த்துக் மாரிமுத்துவிற்கு உதவி செய்திருக்கிறார்.